ஆணவ கொலை

என்றுமே இல்லாத திருநாளாக அதிகாலை 6மணிக்கே பேருந்து ரொம்பி வழிந்தது. பெண்கள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இருக்க, விமலா கம்பியை நின்றவாறே அணைத்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள். அந்தநேரம் இளையராஜாவின் இசை அவள் தூக்கத்தை கெடுத்தது, அவளின் கைபேசி தான் சிணுங்கியது. வந்த அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தால், 

விமலா: என்னடி இவ்ளோ காலையில கால் பண்ணி இருக்க, என்று தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கிக்கொண்டே கேட்டாள்.

அமிர்தா: ஒண்ணுமில்லடி, தூங்கிட்டு இருக்கியா?, வீட்ல சின்ன பிரச்சினை. எங்க வீட்ல விஷயம் தெரிஞ்சி போச்சு, என்ன வேளைக்கு போக வேணாம்னு சொல்றாங்க. மேனேஜர் கிட்ட ரெண்டு நாள் லீவு சொல்லிடு. அதுக்குள்ள சமாளிச்சி வேளைக்கு வரேன்.

விமலா: என்னடி சொல்ற, எப்புடி விஷயம் தெரிஞ்சிது? 

அமிர்தா : நான் தான் விக்னேஷ் கிட்ட சொல்லி அவனை வீட்ல வந்து பேச சொன்னேன், அவனும் வந்து பேசினான், அப்பா சம்மதம் சொல்லலை,  பாழா போனா சாதியை தலைல தூக்கி வெச்சி ஆடினு இருக்காரு. அவனும் எவ்ளோவோ பேசி பார்த்துத்தான், எங்க அப்பா ரெண்டு நாள் கழிச்சி சொல்றேனு டைம் கேட்டு இருக்கார் டி.

விமலா : அவ்ளோ தானே, ஏன் இப்போ அழுவுற, ரெண்டு நாள் கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள போயிடும், நான் மேனேஜர்- ஐ, சமாளிச்சிக்கிறேன் விடு அமிர்தா, ஹலோ.. ஹலோ.. இணைப்பு துண்டிக்க பட்டது. 

என்ன ஆச்சு இவளுக்கு  அவங்க அப்பா வந்து இருப்பாரோ? ஏதோ பிரச்சனை, சரி ஆபீஸ் போனதுக்கு அப்புறம் கால் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து குளியலறையை நோக்கி சென்றாள்.

இரண்டு நாள் கழித்து…

விமலாவிடம் இருந்து அழைப்பு… எடுத்து காதருகில் வைத்து ஒரு கை , என்னடி உங்க அப்பா என்ன சொன்னார் என்று கேக்க..

யாரு விமலவா? அழுகை குரல்  எதிர்முனையில்…

ஆமா ஆண்ட்டி.. அமிர்தா இல்லையா?

இல்லமா, அவ வெளிய  போயிருக்கா, மொபைல் வீட்ல வெச்சிட்டு போயிருக்கா.. வந்ததும் கால் பண்ண சொல்றேன்.

சரி ஆண்ட்டி என்று இணைப்பை துண்டிட்டு விட்டு யோசித்துக்கொண்டே, அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். நேரே அமிர்தா வீட்டுக்கு போயிடலாமா? என்றே அவளின் நண்பனை அழைத்தாள், கோபி.. கோபி எங்கடா இருக்கே, சீக்கிரம் எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு கொஞ்சம் வா, அமிர்தா வீடு வரைக்கும் போயிட்டு வரலாம். எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.

கோபி: இருமா ஒரே ஒரு சைன், அந்த மேனேஜர் எதோ நாலு நாள் லீவாம், இப்போவே வாங்கிட்டா, பிரச்சனை இல்ல, வாங்கிட்டு வந்திருக்கேன் ஒரு பத்து நிமிஷம் இரு என்று சொல்லிவிட்டு மேனேஜர் ரூம் கதவை தட்டி, மே ஐ கம் இன் சார்.. என்று உள்ளே சென்றான்.

நேரம் 20 நிமிடங்களை சுண்டுவதற்குள் முழுங்கி இருக்க, விமலா நகத்தை கடித்து கொண்டே, படதமாய் ஆபீஸ் பார்க்கிங்கில் இங்கும் அங்குமாய் நடந்து கொண்டுருந்தவளை, ஏன் மா இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி நடத்துகிட்டு இருக்கே என்றே வந்தான் கோபி.

சொல்றேன், சீக்கிரம் வண்டி எடுடா என்று கடுகடுத்தாள்.

சரி என்று, மேனேஜர் ஐ நினைத்து உதைத்தான் கோபி.

அமிர்தா வீட்டுக்கு செல்வதற்குள் எல்லா கதையும் சொல்லி முடித்தாள் விமலா. இவ்ளோ நடந்து இருக்கு என்கிட்டே சொல்லவே இல்ல என்று கேட்டுவிட்டு டீ கடை ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு, அமிர்தா வீட்டுக்கு வழியை கேட்டுவிட்டு, மீண்டும் வண்டியை உசுப்பினான் கோபி.

சரியாய் ஐந்து நிமிடம்.. அமிர்தா வீட்டை வந்து சேர்ந்தவர்களுக்கு தலையில் இடியே இறங்கியது..

ஐஸ் பாக்ஸில் அமிர்தா…

சட்டென்று மயங்கி விழுந்தால் விமலா.. அவளை கை தாங்களாக பக்கத்தில் இருந்த திண்ணையில் அமர வைத்துவிட்டு தண்ணீரை முகத்தில் தெளித்தான் கோபி, இங்கயே இரு விசாரிச்சிட்டு வரேன் நீ எதுவும் குழப்பிக்காதே..

சிறிது அடிகளுக்கு பிறகு இருந்தவரை ஏறிட்டு, எப்படி ஆச்சு என்று விசாரித்தான் கோபி.. என்னனு தெரியல, சாயங்காலம் பிரகாஷ் அவங்க வீட்டம்மா ரெண்டு பேரும் வெளியா போயிருந்தாக, நான் தான் கேட்டேன், எங்க ஜோடியா கிளம்பிட்டேங்கனு, கடை தெருவரைக்கும் போயிட்டு வரேன், வீட்ல அவ மட்டும் தான் இருக்க, உடம்பு சரியில்ல கொஞ்சம் பாத்துகோங்க சொன்னாங்க.. அவங்க திரும்ப வர வரைக்கும் இங்க தான் இருந்தேன், வீட்டுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல ஒரு சத்தம் என்னனு போயி பார்த்த அமிர்த தூக்குல தொங்கிட்டு இருந்தா.. பாத்ததும், அவங்க அம்மா மயங்கி விழுந்துட்டாங்க… எதுவும் சொல்றதுக்கு இல்ல இந்த காலத்து பசங்க வலி கூட தாங்க மாட்டேன்றாங்க என்று சொல்லி முடித்துவிட்டு விமலாவை ஏறிட்டார் பக்கத்துக்கு வீட்டு காரர்.

விமலா அமிர்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தவளுக்கு அதிர்ச்சி,  அமிர்தாவின் கை அசைந்தது..

ஒரு வாரம் போயிருக்க….

காலையில் தந்தையிடம் இருந்து காலை பத்திரிக்கை புடிங்கி, அடுப்பங்கரை நோக்கி படித்து கொண்டே நடந்தவள் நின்றாள்…..

கடலூர் அருகே சாலை விபத்து, அடையாளம் தெரியாத நபர் என்றும்,  அடையாளம் தெரிந்தவர் அணுகவும் என்று என்று விக்னேஷின் உடல் புகைப்படத்தில்….

Leave a comment